உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குகிறது நடிகர் சங்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கம், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளிப் பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகளை வழங்க உள்ளது. 
உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குகிறது நடிகர் சங்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கம், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும் தீபாவளிப் பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகளை வழங்க உள்ளது. 

வெளியூர் உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளிப் பரிசுகள் வழங்கும் விழா வரும் ஞாயிறு அன்று பகல் 11 மணிக்கு தி.நகரிலுள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மூத்த நடிகர், நடிகைகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com