ஜி.வி. பிரகாஷ் - வடிவேலு கூட்டணியில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலா படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார். இதில் நகைச்சுவை வேடத்தில் வடிவலு நடிக்கிறார்.
பலவருடங்களுக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் வடிவேலு. விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ள வடிவேலு, அதற்கு அடுத்ததாக இந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.