ஒரு டீசர் வெளிவந்தது. சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியது. அதன்பிறகு சத்தமே இல்லை. இப்போது தரமணி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நவம்பர் 20 அன்று தரமணி படப் பாடல்கள் வெளிவருகின்றன. டிசம்பர் 23 அன்று படம் வெளிவருகிறது.