"விசாரணை' திரைப்படம்: ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
"விசாரணை' திரைப்படம்: ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்காக இத் திரைப்படம், இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநர் எழுதிய நாவலை...: கோவை ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய "லாக்கப்' என்ற நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தேசிய விருதுகள் என இந்திய அளவிலும் இப்படம் அங்கீகாரம் பெற்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது. இந்நிலையில் இன்னொரு சிறப்பை பெறும் வகையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடக்கவுள்ள 89-ஆவது ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் இப்படம் போட்டியிட உள்ளது.
இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து விசாரணை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய பட்டியலில் இருந்து விசாரணை படம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் மகிழ்ச்சி: ஆஸ்கர் விருதுக்கு விசாரணை திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியது: ஆஸ்கர் விருதுக்கு விசாரணை திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட நிகழ்வு, அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கு தன்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது. இது எனக்கு முக்கியமான தருணம் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளேன் என்று தெரிவித்தார்.
அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம், நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படமாகும். இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு முன்பு...


இதற்கு முன்பாக தமிழ்ப் படங்களில் இருந்து ஹேராம் திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com