"கபாலி' படத்துக்கு வரி விலக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு

ரஜினிகாந்த் நடித்து வெளியான "கபாலி' திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கிய தமிழக வணிக வரித் துறையின் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"கபாலி' படத்துக்கு வரி விலக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு

ரஜினிகாந்த் நடித்து வெளியான "கபாலி' திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கிய தமிழக வணிக வரித் துறையின் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 2009-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத் துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம், மொழி மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள், வன்முறை, ஆபாச காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் வந்த அதிமுக அரசும் அதே நடைமுறையை பின்பற்றியதுடன், படங்களுக்கான வரிவிலக்கை பரிந்துரைக்க குழுவையும் அமைத்தது. இந்த குழுவானது அரசியல் அழுத்தம் காரணமாகவே, அதிகம் செலவு செய்து எடுக்கப்படும் படங்களுக்கும் வரிச்சலுகை அளித்து வருகிறது.
"கபாலி' போன்று பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட பிற படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படவில்லை.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததற்காகவே அந்த படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை அளித்திருப்பதாகவே உணர முடிகிறது.
ஆகையால், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு வழங்கிய தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் கடந்த ஜூலை 21 -ஆம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
வரிவிலக்காக பெற்ற தொகையை கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com