தனுஷின் 'கொடி' பர்ஸ்ட் லுக் எப்போது?

எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 'கொடி' பர்ஸ்ட் லுக் எப்போது?

எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வருகிற செப் 28-ந் தேதி மாலை ‘கொடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com