தோனி படத்துக்கு பாகிஸ்தானில் தடையா?

இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு படத்தையும் பாகிஸ்தானின் இறையாண்மை, தேச ஒற்றுமை பாதிக்கப்படாதபடி கவனமாக தணிக்கை செய்வோம்
தோனி படத்துக்கு பாகிஸ்தானில் தடையா?

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், 'பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர்.

இதனையொட்டி, தோனி படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு வெளியாக அனுமதி மறுப்பு என்றும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அந்நாட்டு தணிக்கைக் குழுவின் தலைவர் மொபாஷிர் ஹாசன் கூறும்போது: பாகிஸ்தானில் தோனி படம் தொடர்பாக தணிக்கைக் குழுவின் அனுமதி வேண்டி இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை. எங்களிடம் வராத ஒரு படத்தை நாங்கள் எப்படி தடை செய்யமுடியும்?

இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு படத்தையும் பாகிஸ்தானின் இறையாண்மை, தேச ஒற்றுமை பாதிக்கப்படாதபடி கவனமாக தணிக்கை செய்வோம். ஆனால் தற்போது நிலவும் சூழலைக் கொண்டு இந்தியப் படங்கள் மீதான தணிக்கை குறித்த எந்தவொரு கட்டளையும் எங்களுக்குப் பிறப்பிக்கப்படவில்லை. வழக்கம்போல்தான் பணியாற்றுகிறோம்.

கடந்த வாரம் தான் பஞ்சோ என்கிற ஹிந்திப் படத்துக்கு அனுமதி கொடுத்தோம். அந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் திரையரங்குகளிலிருந்து உடனே நீக்கிவிட்டார்கள். தோனி படம் இங்கு வெளியிடப்படவில்லை. எங்களுக்கும் தணிக்கை செய்யும்படி கோரிக்கை வரவில்லை. எங்களைப் பற்றி இந்திய ஊடகங்களில் தவறாக எழுதுகிறார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com