நடிகை கீர்த்தி சுரேஷின் சிறப்பம்சம்!: அனு பார்த்தசாரதி

எந்தக் கலாசார ஆடையாக இருந்தாலும் சரி, அது கீர்த்தி சுரேஷுக்கு...
நடிகை கீர்த்தி சுரேஷின் சிறப்பம்சம்!: அனு பார்த்தசாரதி

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பதாலும் ஈர்க்கும்படியான டிரெய்லராலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தணிக்கையில் ரெமோ படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி, விடுமுறை சமயத்தில் ரெமோ வெளியாகிறது.

ரெமோ படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய அனு பார்த்தசாரதி, இந்தப் படத்தில் கிடைத்த அனுபவம் பற்றி கூறும்போது:

இயக்குநரின் சிந்தனையைப் புரிந்துகொண்டும், கதாபாத்திரத்தை நினைவில் வைத்துக்கொண்டும் ஆடைகள் வடிவமைப்பதே ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கு அழகு. 

ரெமோ படத்தில்  சிவகார்த்திகேயனை இரண்டு கதாபாத்திரங்களில் பார்க்கலாம். ஒன்று,  இந்த காலத்துக்கேற்ற மாடர்ன் இளைஞன் கதாபாத்திரம். மற்றொன்று அழகான செவிலியர் கதாபாத்திரம். இதில் செவிலியர் வேடத்துக்கு ஆடை வடிவமைப்பதுதான் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. பொதுவாகவே ஓர் ஆணைப் பெண்ணாகத் தோற்றுவிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் எங்கள் ரெமோ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உதவியால் இந்தப் பணியை என்னால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடிந்தது. இந்தக் கதாபாத்திரமானது யதார்த்தமாக அமைய,  செவிலியர் ஆடை மீது இருக்கும் பட்டன், பெண்கள் விரும்பி அணியும் அலங்கார நகை போன்ற சிறு சிறு விஷயங்களில் நான் கவனம் செலுத்தி இருக்கிறேன்.

தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்கும் ஒரு நடிகர் சிவகார்த்திகேயன். கடினமான தருணங்களிலும் புன்னகைக்கும் மனோபாவம் படைத்தவர் அவர். அதேபோல் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எந்தக் கலாசார ஆடையாக இருந்தாலும் சரி, அது கீர்த்தி சுரேஷுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். அதுதான் அவருடைய முக்கியமான சிறப்பம்சம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையும் 'ரெமோ' படத்தின் அனைத்து காட்சிகளிலும் பிரதிபலிக்குமாறு செய்திருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com