புதிய சினிமா ஸ்டுடியோவை திறந்து வைத்தார் கமல்ஹாசன்!

புதிய சினிமா ஸ்டுடியோவை திறந்து வைத்தார் கமல்ஹாசன்!

கலை நயத்தோடு மிக பிரம்மாண்டமாக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் 'ஸ்டுடியோவை' கமல் ஹாசன்  திறந்து வைத்தார் 

கலை நயத்தோடு மிக பிரம்மாண்டமாக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் 'ஸ்டுடியோவை' கமல்ஹாசன்  திறந்து வைத்தார் 

தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் காலப்போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான G STUDIO, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது. இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் திறந்து வைத்தார். உலகத் தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். இசைஞானி இளையராஜா குத்துவிளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும்  இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினார். 

கோகுலம் குழுமத்தின் நிறுவனர் கோபாலன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பற்றியும் இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது. 'எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள்தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். திரையுலகிற்கு திரு கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை 'தர்மா' என்று தான் நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ,  அதே போல் இந்த ஜி - ஸ்டுடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது  காதல் இருந்தால்தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்' என்று பெருமையாக  கூறினார் கமல்ஹாசன். 

நடிகர் சங்கத்தின் பொது செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், திரு கோபாலன் அவர்களை தமிழ் திரைலகிற்கு மேலும் நல்ல திரைப்படங்களை வழங்க வரவேற்றார். 'சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில், தலை சிறந்த ஸ்டுடியோ ஒன்று தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. இனி மற்றவர்களை விட நாங்கள் 'உள்கட்டமைப்பில்'  எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பெருமையோடு சொல்லலாம்" என்று உற்சாகமாக கூறினார் விஷால். மேலும் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளரான நாசர், இது போன்ற மிக பிரம்மாண்ட ஸ்டுடியோ, சென்னையில் நிறுவப்பட்டிருப்பது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறினார்  FEFSI தலைவர் ஆர். கே. செல்வமணி கூறியதாவது: 'இங்கு உள்ள அறைகள் அனைத்தும், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி லைட் மென் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இங்கு இருக்கும் இது போன்ற வசதியை நான் வேறெங்கும் கண்டதில்லை.'

எல் சுரேஷ் (President of the South Indian film chamber), விக்ரமன்  (President of  Directors association), கண்ணன்  (Secretary of the SICA), சண்முகம் அங்கமுத்து  (President of Art Directors association), கலை இயக்குநர் சாபு சிரில், and மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கோகுலம் கோபாலன் அவர்களின் இந்த முயற்சியை வாழ்த்தியது மட்டுமின்றி, அவர்களின் பேராதரவையும் வழங்க உறுதி அளித்தனர். 

'ஜி - ஸ்டுடியோஸின் ' நிர்வாக இயக்குநர் பிரவீன் கூறுகையில்: 'இந்த ஸ்டுடியோ துவங்கும் திட்டத்தை எங்களுக்கு அளித்தவர் கமல்ஹாசன் சார் தான். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். பல ஹாலிவுட் ஸ்டுடியோக்களை நாங்கள் நேரில் போய்  பார்த்து, அதற்கு இணையாக  ஜி - ஸ்டுடியோஸை எழுப்பி இருக்கின்றோம்.’ என்றார். 

தரத்திலும், அதி நவீன வசதிகளிலும் ஜி - ஸ்டுடியோஸ் சிறந்து விளங்கும் என்று உறுதி  அளித்தார் கோகுலம் கோபாலன் விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில்  வளர்ந்து வரும்  ஏராளமான  இளம் இயக்குநர்கள்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com