விஷால் மீது காவல்துறையில் புகார்!

திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு நலச்சங்கத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களைத் திருடியதாக...
விஷால் மீது காவல்துறையில் புகார்!

நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு நலச்சங்கத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களைத் திருடியதாக விஷால் உள்பட 11 தயாரிப்பாளர்கள் மீது கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் பாபு கணேஷ் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாகப் பொறுப்பை வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கடந்த முறை பதவி வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தைக் குறை கூறி வந்த, நடிகர் விஷால் தனது தலைமையில் புதுக் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் களம் கண்டார். "நம்ம அணி' என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 1059 வாக்குகள் பதிவாகின. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலில் 478 வாக்குகள் பெற்று விஷால் பெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com