கர்நாடகத்தில் 'பாகுபலி-2' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள்
கர்நாடகத்தில் 'பாகுபலி-2' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கன்னட அமைப்பினரிடம் படத்தின் இயக்குநர் ராஜமெளலி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், '9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஒரு கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே தயாரித்த பாகுபலி முதல் பாகம் உள்பட சத்யராஜ் நடித்த பல திரைப்படங்கள் கடந்த 9 ஆண்டுகளில் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சத்யராஜ் ஏற்றுள்ளார். அவர் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல' என்று ராஜமெளலி கூறியுள்ளார்.

ஆனால், சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கன்னட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து நடிகர் சத்யராஜ் பேசிய விடியோ, கர்நாடகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவி வருகிறது. இது, பாகுபலி-2 படத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் 'பெங்களூரு பந்த்' என்ற பெயரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இது குறித்துத் கூறியதாவது: ராஜமெளலி அல்லது அவர் எடுத்துள்ள திரைப்படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும். ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். சத்யராஜின் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com