நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் பெங்களூரில் முழுஅடைப்புப் போராட்டம் வாபஸ்

காவிரி விவகாரத்தில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கு நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால், அவரது கருத்தைக் கண்டித்து வரும் 28-ஆம் தேதி பெங்களூரில் நடத்துவதாக இருந்த முழுஅடைப்புப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக, கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் பெங்களூரில் முழுஅடைப்புப் போராட்டம் வாபஸ்

காவிரி விவகாரத்தில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கு நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால், அவரது கருத்தைக் கண்டித்து வரும் 28-ஆம் தேதி பெங்களூரில் நடத்துவதாக இருந்த முழுஅடைப்புப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக, கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
9 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் திரைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்ட காவிரி நதிநீர் போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், கன்னடர்கள் புண்படும்படியான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவர் பேசிய உரையின் காணொளிக் காட்சி 2 மாதங்களுக்கு முன்னர் யூடியூப் வலைதளத்தில் வெளியாகி கன்னடர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், நடிகைகள் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோருடன் நடிகர் சத்யராஜ் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் 2-ஆம் பாகம் 28-ஆம் தேதி கர்நாடகத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இதனிடையே, காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏப்.28-ஆம் தேதி பெங்களூரில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாகவும், பாகுபலி-2 திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம் என்றும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். இதனிடையே, தன்னுடைய பேச்சுக்கு நடிகர் சத்யராஜ் வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியது:
காவிரி விவகாரத்தில் தான் பேசியதற்கு கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ளார். வருத்தத்துக்கும், மன்னிப்புக்கும் பெரிய மாறுபாடு எதுவுமில்லை. எனவே, அவர் மன்னிப்புக் கேட்டதாக கருதி இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் இருந்து கட்டப்பாவை(சத்யராஜ்) விடுதலை செய்கிறோம்.
இனிமேல் நடிகர் சத்யராஜ் கன்னட மொழி, கன்னடர்கள் குறித்து இலகுவாக பேசக் கூடாது. அப்படி பேசினால் கர்நாடகத்தில் சத்யராஜ் நடித்த எந்தப் படத்தையும் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட எந்த மொழியைச் சேர்ந்த நடிகராக இருந்தாலும் கன்னட மொழி, கன்னடர்களை பற்றி இழிவாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளதால், அவருக்கு எதிராக பெங்களூரில் நடத்தவிருந்த முழுஅடைப்புப் போராட்டத்தை கன்னட அமைப்புகள் கைவிடுகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com