தேசிய விருது பட்டியலில் டப்பிங் கலைஞர்களுக்கும் இடம்

திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் டப்பிங் கலைஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னணிக் குரல் கலைஞர்கள்
பின்னணிக் குரல் கலைஞர்கள்

திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் டப்பிங் கலைஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் 1,600-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. பாரம்பரியமான இச்சங்கத்தில் பழம் பெரும் கலைஞர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் இதுவரை டப்பிங் கலைஞர்களுக்கு இடமில்லை. பின்னணி குரல் கலைஞர்களுக்கு இதுவரை தேசிய அங்கீகாரம் எதுவும் இல்லை. அடையாளம் காணப்படாமலேயே பல கலைஞர்கள் மறைந்து விட்டனர். அதனால் இனி வரும் காலங்களில் தேசிய விருது பட்டியலில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இதுவரையில் சண்டை பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தாண்டு அந்த துறைக்கும் தேசிய விருது வழங்கும் முறையைக் கொண்டு வந்து விட்டார்கள். அது போல் டப்பிங் கலைஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

பின்னணி பாடகர்களுக்கு விருதளிக்கப்பட்டு வரும் நிலையில், நாங்கள் எந்தளவில் குறைந்தவர்கள் என்று தெரியவில்லை.

முழு அடைப்பில் பங்கேற்பு: விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கிறோம். தமிழகத்தில் எந்த இடத்திலும் டப்பிங் வேலைகள் நடைபெறாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com