பாகுபலி 2: முதல் விமரிசனம் வெளியானது!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் உமைர் சாந்து, தன்னுடைய வலைத்தளத்தில்...
பாகுபலி 2: முதல் விமரிசனம் வெளியானது!

பாகுபலி 2 படம் நாளைதான் வெளிவருகிறது. ஆனால் அந்தப் படத்தை தணிக்கை மற்றும் பல்வேறு வழிகளில் பார்த்த நபர்கள் அதன் விமரிசனத்தைப் பகிர்ந்துவருகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் உமைர் சாந்து, தன்னுடைய வலைத்தளத்தில் படத்தின் விமரிசனத்தை வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பு:

* படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் - ஹாலிவுட்டின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், ஹாரி பாட்டர் படங்களுக்கு நிகராக உள்ளது. 

* பிரபாஸ், ராணாவின் நடிப்பு அருமை. முக்கியமாக ராணாவின் சீற்றம் படத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. துணைக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். 

* இந்தியாவில் ராஜமெளலிக்கு இணையான வேறு எந்தக் கதை சொல்லியும் இதுபோல ஒரு கதையை இந்தளவுக்குப் பிரமாண்டமாகக் கூறமுடியாது. 

* இதுபோன்ற ஒரு படம் இந்தியத் திரையுலகுக்குப் பெருமைக்குரியது. 

* நான் பார்த்த சிறந்த இந்தியப் படம். இந்த வெள்ளியன்று வரலாறு திருத்தி எழுதப்படும்.

* ரேட்டிங் 5/5

இவ்வாறு படத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ள உமைர், படத்தின் கதையைச் சொல்லவில்லை. முக்கியமாக, கட்டப்பா, பாகுபலியை கொன்றது ஏன் என்கிற ரகசியத்தை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com