ஆகஸ்ட் 11: மூன்று பெரிய படங்கள் ரிலீஸ்!

விடுமுறை தினத்தையொட்டி 3 படங்களும் வெளிவரவுள்ளதால் 3 படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என...
ஆகஸ்ட் 11: மூன்று பெரிய படங்கள் ரிலீஸ்!

வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி.

இந்த மூன்று படங்களும் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரவுள்ளன. 

அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 24 அன்று வெளிவருகிறது. 

இதனால் அடுத்த வாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளிவரவுள்ளன.

ஜூலை 28 அன்று வெளிவருவதாக இருந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக எம்மனசு தங்கம், இயக்குநர் ராமின் தரமணி ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.

விடுமுறை தினத்தையொட்டி 3 படங்களும் வெளிவரவுள்ளதால் 3 படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com