வேலைநிறுத்தம் - எனக்குப் பிடிக்காத வார்த்தை: ரஜினி

இப்பிரச்னையில் விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கிற முறையில் அன்பான வேண்டுகோள்...
வேலைநிறுத்தம் - எனக்குப் பிடிக்காத வார்த்தை: ரஜினி

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சம்பள உயர்வு உள்ளிட்ட ஃபெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிராகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடந்து வந்த பெரும்பான்மையான படத்தின் படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்தனர். செவ்வாய்க்கிழமை காலை முதலே தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லாததால், படப்பிடிப்புகளைத் திட்டமிட்டவாறு தொடங்க முடியவில்லை. சென்னை பூந்தமல்லியில் நடந்து வந்த ரஜினியின் காலா, விஜயின் மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி தலைமையில் ஃபெப்சி நிர்வாகிகள் ரஜினியை இன்று சந்தித்தார்கள். ரஜினி அவர்களிடம் வேலை நிறுத்தம், தொழிலாளர் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

எனக்குப் பிடிக்காத சில சொற்களில் வேலைநிறுத்தம் என்ற சொல்லும் ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலன் மட்டும் கருதி  அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கிற முறையில் அன்பான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com