வேலையில்லா பட்டதாரி 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு; புதிய டீசர் வெளியீடு!

வேலையில்லா பட்டதாரி 2 படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரும் என்று தனுஷ் அறிவித்துள்ளார்...
வேலையில்லா பட்டதாரி 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு; புதிய டீசர் வெளியீடு!

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

 இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. 

அஜித் நடிக்கும் விவேகம் படம் ஆகஸ்ட் 24 அன்று வெளிவரவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவருவதாக இருந்தது.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரும் என்று தனுஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன் புதிய டீசர் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com