அஜித் 25: குவியும் வாழ்த்துகள்!

ரசிகர்களுக்கு நிகராக திரைப்பட நட்சத்திரங்களும் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
அஜித் 25: குவியும் வாழ்த்துகள்!

அஜித் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகியுள்ளதால் அதை விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அஜித்துக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.

கும்பகோணத்தில் உள்ள திம்மக்குடியில் அஜித்துக்கு ரூ. 1 லட்சம் செலவில் 20 கிலோ எடையில் 4 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஹரிபாபு என்கிறவர் இதை வடிவமைத்துள்ளார்.  

ரசிகர்களுக்கு நிகராக திரைப்பட நட்சத்திரங்களும் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். #25YearsOfAjithism என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் டாப் 10-ல் இடம்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com