ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் போஸ்டர்

ஜீவா நடிக்கும் கீ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்!  
ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் போஸ்டர்

அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் படம் கீ. வித்தியாசமான தலைப்பு கொண்ட இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஜீவாவுடன் இணைந்து நிக்கி கல்ராணி, சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கீ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.

இந்தப் படத்தில் ஜீவா ஒரு ஹாக்கராக (hacker) நடிக்கிறார். இதற்காக ஜீவா ஹாக்கிங் பற்றிய ஆவணப்படங்களை தரவிறக்கம் செய்து பார்த்தாராம். இயக்குனர் காலீஸ் படத்தைப் பற்றியும் ஜீவாவின் பங்களிப்பைப் பற்றியும் கூறுகையில், ‘ஜீவாவுக்கு தொழில்நுட்பத்தில் அனுபவமும் ஆழமான ஈடுபாடும் உள்ளது. அவரது கதாபாத்திரத்தைப் பற்றி சொன்ன போது உற்சாகமாகிவிட்டார். ஜீவாவிடம் இப்போது மூன்று ஹார்ட் டிஸ்ட் முழுவதும் ஹாக்கிங் மற்றும் கணினித் தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் உள்ளன. படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய டிப்ஸ் தருவது ஜீவாதான். இந்தப் படத்தில் ஜீவா ஜாலியான ஒரு மாணவர். விளையாட்டுக்காக தகவல் திருட்டு வேலைகளைச் செய்பவராக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு கீ என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் அது தொல்பாக்கியத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை. ஒரு செயலை அல்லது சூழலை சொல்லும் வார்த்தை அது. இதற்கு எதிர்மறை அர்த்தமும் உண்டு, நேர்மறையான அர்த்தமும் உண்டு. தவிர இது கணினி விசைப் பலகையில் (கீபோர்ட்) ஒரு விசையான  கீ என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிப் போட ஒரு சின்ன கீ போதும் என்ற படிமத்துடனும் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளோம். இப்படத்தில் நிக்கி கல்ராணி நடிக்கிறார். அவருக்கு தமிழில் நடிப்பது பெரும் ஆர்வம்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com