வேலையில்லா பட்டதாரி 2: காலை 5 மணி காட்சிகள் கிடையாது என தனுஷ் முடிவு!

வேலையில்லா பட்டதாரி 2 படம், உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில்...
வேலையில்லா பட்டதாரி 2: காலை 5 மணி காட்சிகள் கிடையாது என தனுஷ் முடிவு!

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 11 அன்று வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி 2 படம் 2 மணி நேரம் 9 நிமிடம் ஓடக்கூடியது. தமிழில் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகிறது. 

வேலையில்லா பட்டதாரி 2 படம், உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நாளை காலை 5 மணிக்கு முதல் காட்சி தொடங்க பல திரையரங்குகள் முடிவு செய்தன. அதற்கேற்றபடி முன்பதிவுகளும் நடந்தன. இதற்காகப் படத்தின் கேடிஎம்-ஐ முன்கூட்டியே வழங்கும்படி திரையரங்கு அதிபர்கள் தனுஷிடம் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் அதிகாலைக் காட்சிகளை நடத்த தயாரிப்பாளர் தரப்பு தற்போது மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் முதல் காட்சி காலை 8 மணிக்குத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து காலை 5 மணிக் காட்சிகள் 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தில் விருப்பம் இல்லாதவர்கள் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று திரையரங்குகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கின் இதுகுறித்த அறிவிப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com