படம் தோல்வியடைந்ததால் ரூ. 35 கோடி நஷ்டஈடு வழங்கும் சல்மான் கான்!

விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்குப் படம் விற்கப்பட்டதால் பலரும் சல்மான் கானிடம் நஷ்டம் குறித்து முறையிட்டார்கள்...
படம் தோல்வியடைந்ததால் ரூ. 35 கோடி நஷ்டஈடு வழங்கும் சல்மான் கான்!

சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - டியுப்லைட். வழக்கமாக சல்மான் கானின் படங்களில் வசூலில் ரகளை செய்யும். அதேபோல இந்தப் படமும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களில் வெளிவந்த சல்மான் கான் படங்களில் முதல் மூன்று நாள்களில் குறைந்த வசூலை அடைந்த படம் என்கிற நிலைமை டியூப்லைட் படத்துக்கு ஏற்பட்டது. முதல் 3 நாள்களில் ரூ. 65 கோடி வசூலித்தது.  

ரம்ஜான் சமயத்தில் வெளியான சல்மான் படங்களின் வசூலை பாலிவுட் விமரிசகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டார். 

2011: பாடிகார்ட் ₹ 88.75 கோடி [புதன் - ஞாயிறு)
2012: ஏக் த டைகர் ₹ 100.16 கோடி [புதன் - ஞாயிறு]
2014: கிக் ₹ 83.83 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2015: பஜ்ரங்கி பைஜான் ₹ 102.60 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2016: சுல்தான் ₹ 105.53 கோடி [புதன் - ஞாயிறு]
2017: #டியூப்லைட் ₹ 64.77 கோடி [வெள்ளி - ஞாயிறு]

முதல்வாரம் இந்தப் படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. கடைசியில் ஒட்டுமொத்தமாக ரூ. 121 கோடி வசூலித்து தோல்வி நிலையை அடைந்தது. விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்குப் படம் விற்கப்பட்டதால் பலரும் சல்மான் கானிடம் நஷ்டம் குறித்து முறையிட்டார்கள். இதையடுத்து டியூப்லைட் படத் தோல்வியால் பாதிப்படைந்த விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்க சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, ரூ. 35 கோடியை நஷ்டஈடாக வழங்கவுள்ளார். ஜூலை மாதம் இறுதியில்லேயே நஷ்டஈடு கொடுக்க முடிவு செய்தார் சல்மான் கான். ஆனால் 2017 ஐஐஎஃப்ஏ விருதுகள் நிகழ்ச்சியில் அப்போது மும்முரமாக இருந்ததால் தற்போது நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளார். சல்மான் கானின் இந்த நடவடிக்கையால் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com