காப்பாற்றப்பட்டார் காயத்ரி! வெளியேறிவிடுவாரா சக்தி? பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன?

காப்பாற்றப்பட்டார் காயத்ரி! வெளியேறிவிடுவாரா சக்தி? பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன?

ஓவியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்று பலர் முடிவெடுத்துவிட்டாலும்,

ஓவியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்று பலர் முடிவெடுத்துவிட்டாலும், அதில் சிலர் சனி ஞாயிறு கட்டாயம் பார்த்துவிடுகிறார்கள். அதற்கான காரணம் அந்த இரு தினங்களில் கமல் வருவதும், யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் தான். 

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் காயத்ரி காப்பாற்றப்பட்டதுதான். பிக் பாஸ் கேட்ட ஐந்து கேள்விகளுக்கு காயத்ரி சரியான பதில்களை சொன்னதால் காப்பாற்றப்பட்டார். 

அதை அடுத்து பிந்து மாதவி, கணேஷ் இருவரும் காப்பாற்றப்பட்டதை கமல் அறிவித்தார். வையாபுரியை அனைவருமே காப்பாற்றி கடைத்தேற்றிவிட்டனர். கடைசியில் ஆபத்துக் கட்டத்தில் எஞ்சியிருப்பவர்கள் சினேகன், ஆரவ் மற்றும் சக்தி மட்டுமே. இந்த மூவரில், சக்திதான் எவிக்‌ஷன் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சக்தி மற்றவர்களை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்று இணைய சக்திகள் ஆருடம் சொல்கின்றன.

நகமும் சதையும் போல் இருந்த காயத்ரியும் சக்தியும் இதன் மூலம் இனி பிரிந்துவிடுவார்கள். காயத்ரி இனி தனிப்படையாக செயல்பட வேண்டியிருக்கும். என்ன ஆனாலும் அவருடைய ஆட்டிட்யூட் மாறப் போவதில்லை. காயத்ரி காப்பாற்றப்பட்டதை பெரும்பாலோனர் விரும்பவில்லை. ஆனால் ஏற்கனவே ஓவியாவை இழந்து டி ஆர் பி சரிந்த விஜய் டிவி இன்னொரு இழப்பை அவ்வளவு சீக்கிரம் விரும்ப மாட்டார்கள் எனத் தெரிகிறது. காரணம் ஒரு குடும்பம் அமைதியாக இருப்பதைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை. பார்வையாளர்களின் பரபரப்பு வேட்கைக்குத் தீனி போடுவதுதான் சானல்களின் தந்திரம். பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் செய்வதும் இது போன்ற செயல்களே! பிக் பாஸைத் திட்டிக் கொண்டே பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிரிகரித்து வருவதே இதற்கான சான்று.

நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், நாளை யார் வெளியேறுவார்கள் என்று தெரிந்துவிடும். இன்னும் 50 நாட்களை ஓட்ட என்னென்ன தந்திரங்கள், என்னென்ன டாஸ்குகளோ பிக் பாஸுக்கே வெளிச்சம்! எவ்வளவோ பார்த்துட்டோம், இனி என்ன என்றும் பார்த்துவிடுவோம் என்று உறுதியாகவே இருக்கிறார்கள் இந்நிகழ்ச்சியின் ரசிகர்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com