பெளலிங்கா பீல்டிங்கா?: 'கிரிக்கெட் உள்ளவரை சண்முகசுந்தரம் நினைவுகூரப்படுவார்!'

சென்னை 28 படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள சண்முகசுந்தரம், கிரிக்கெட் போட்டியில் விருந்தினராகப் பங்கேற்பார்...
பெளலிங்கா பீல்டிங்கா?: 'கிரிக்கெட் உள்ளவரை சண்முகசுந்தரம் நினைவுகூரப்படுவார்!'

கரகாட்டக்காரன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டிகர் சண்முக சுந்தரம் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று அவர் காலமானார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர். அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர்.

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்த சண்முக சுந்தரம், பிறகு சிவாஜியின் உதவியால் ரத்த திலகம் படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு கர்ணன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து வாழையடி வாழை, இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் நடித்தார்.

அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார் சண்முக சுந்தரம். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது: நடிகர், அங்கிள், தாத்தா மற்றும் நண்பர். எனக்குப் பிடித்த நடிகரான சண்முக சுந்தரம் மறைந்துவிட்டார். என்னுடைய எல்லாப் படங்களிலும் நடித்தவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் நிதின் சத்யா கூறியதாவது: கர்ணன், கரகாட்டக்காரன், சென்னை 28.. மிகவும் நீண்ட பயணம். கிரிக்கெட் உள்ளவரை நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் என்று இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை 28 படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள சண்முகசுந்தரம், கிரிக்கெட் போட்டியில் விருந்தினராகப் பங்கேற்பார். டாஸ் நிகழ்வில் டாஸ் வென்ற கேப்டனிடம் பெளலிங்கா ஃபீல்டிங்கா என்று கேட்டுக் குழப்புவார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் மிகவும் பாராட்டுப்பெற்ற ஒன்றாகும். இதை வைத்துத்தான் நிதின் சத்யா அவ்வாறு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com