‘மாட்டுக்கு நான் அடிமை’ திரைப்படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகர் சாம்பார் ராசன்!

இந்தப் பெயரைச் சொன்னதும் உங்களுக்கு வேறு நடிகரது நினைவு வந்தால் அவருக்கும் இந்தப் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறோம். ஏனெனில் இந்தப் படத்து நாயகனின் அதிகாரப் பூர்வ சினிமா
‘மாட்டுக்கு நான் அடிமை’ திரைப்படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகர் சாம்பார் ராசன்!

தமிழ் சினிமாவில் புரட்சித்தலைவர், நடிகர் திலகம், நாட்டியப்பேரொளி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, பவர் ஸ்டார், உள்ளிட்ட அடைமொழிகளைப் போலவே தல, சாம்பார், பசு நேசன், காமெடி பெல், முருங்கைக்காய் நடிகர்,  போன்ற பட்டப்பெயர்களுக்கும் எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. நடிகர்களது பெயர்களைக் குறிப்பிடாமல் இந்தப் பட்டப் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டாலும் கூடப் போதும் ரசிகர்கள் அவர்களை கச்சிதமாக அடையாளம் கண்டு கொள்வார்கள். அந்தளவுக்கு அடைமொழிகளாலும், பட்டப் பெயர்களாலும் நிரம்பி வழிகிறது கோலிவுட்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு... தங்களுக்கு இப்படிப்பட்ட பட்டப்பெயர்கள் இருப்பதெல்லாம் அவரவர் மேனேஜர்கள் சொன்னாலொழிய பெரும்பாலும் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த வரிசையில் இப்போது புதிதாக அனிமல் ஸ்டார் ‘சாம்பார் ராசன்’ என்றொரு அடைமொழியுடன் புத்தம் புது நடிகர் புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அவருக்கு வேறு பெயர் தேவையில்லையென, படத்தில் தனது அதிகாரப்பூர்வ அறிமுகப் பெயராகவே இந்தப் பெயரைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

சாம்பார் ராசன் நடிப்பில் வெளிவர இருக்கும் புத்தம் புது திரைப்படத்தின் பெயர் ‘மாட்டுக்கு நான் அடிமை’ இந்தத் திரைப்படத்தின் தலைப்பு வேடிக்கையாக இருந்தாலும், படமென்னவோ மாடுகளின் நலன் சார்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

படம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்... சாம்பார் ராசன் தெரிவித்தது;

  • சாம்பார் இல்லாமல் தமிழ்நாடே இல்லை. நாம் தினமும் சாம்பார் சாப்பிட்டுப் பழகியவர்கள். சாம்பார் பிரியர்களுக்கு சந்தோசமான உணர்வைத் தர வேண்டும் என்ற நோக்கில் தான், நான் என் பெயரை சாம்பார் ராசன் என்று வைத்துக் கொண்டேன். இந்தப் பெயரில் என்னை வெள்ளித்திரையில் காணும் போது சாம்பார் சாப்பிட்ட திருப்தியை மக்கள் அடைவார்கள் என நம்புகிறேன். இந்தப் படத்தின் தலைப்பு காமெடியாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் நாங்கள் மக்களுக்குச் சொல்லவிருப்பது கால்நடைகளின் நலன் சார்ந்த மிக, மிக சீரியஸான விஷயம். அதனால் படத்தில் நான் ஆவேஷப்படடு சண்டையிடும் காட்சிகளும் கூட உண்டு
  • படத்தின் சண்டைக்காட்சிகள் இதுவரை நீங்கள் கண்டிருக்காத வகையில் மிக, மிகப் புதுமையானதாக இருக்கும். மொத்தம் 5 சண்டைக்காட்சிகள் இப்படத்தில் இடம்பெற உள்ளன.
  • அதுமட்டுமல்ல நான் படம் முழுதும் வெறும் கோவணத்துடன் மட்டுமே நடிக்கவிருக்கிறேன். ஏனென்றால் கோவணம் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உடை, அதை அணிவதற்கு யாரும் வெட்கப்படத் தேவை இல்லை என்பதை உணர்த்தவே நான் படம் முழுவதும் ஹீரோவுக்கான உடையாக அதை அணிகிறேன்.
  • படத்தில் பசுவைக் கண்ணால் கண்டதுமே அதற்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை நான் கண்டறிந்து விட முடியும் என்பதால் இத்திரைப்படத்தில் நான் பசு விஞ்ஞானியாகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கவிருக்கிறேன்.அது எப்படி என்றால் பசுவில் பால் கரக்க நான் பாஸ் வேர்டு உருவாக்கி இருப்பேன். சரியான பாஸ் வேர்டு போட்டால் மட்டுமே பசுவில் இருந்து பால் கரக்க முடியும் என்பது மாதிரியான தொழில்நுட்பங்களை நான் பயன்படுத்தி இருப்பதால் ரசிகர்களின் ரசனையைத் தூண்டும் விதமாக இப்படம் அமையும் என நம்புகிறேன். என்கிறார். 

இத்திரைப்படத்தில் ‘கோலி சோடா’ புகழ் சீதா நாயகியாக நடிக்கவிருக்கிறார். அதோடு, மாட்டுக்கு நான் அடிமை படத்தைப் பொறுத்தவரை இன்னொரு மிக முக்கியமான விஷயம்;

‘படத்தின் டைட்டில் சாங் சினிமா உலகில் ஒரு மாபெரும் புதுமையை உண்டாக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. பார்க்கும் போது பிரமிப்பில் நீங்கள் மூர்ச்சையாகிப் போவீர்கள். அப்படியொரு இன்ப அதிர்ச்சி உங்களுக்குக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் படத்தின் ஆடியோ லாஞ்சில் வைத்து அந்த இன்ப அதிர்ச்சியை நாங்கள் உடைக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதனால், வேறு வழியே இல்லை, படம் குறித்து மிக்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் பொறுமை காக்க வேண்டியது தான்.’ அதற்குப் பின் இன்ப அதிர்ச்சியில் நீங்கள் மூழ்கித் திளைக்கும் போது அதைப் பார்க்க கண்டிப்பாக அந்த ஆடியோ லாஞ்சை நானும் மிஸ் பண்ணப்போவதில்லை.” என்று  மாட்டுக்கு நான் அடிமை திரைப்படம் குறித்து படு கூலாகப் பேசிக் கொண்டிருக்கிறார் படத்தின் நாயகனான சாம்பார் ராசன்.

இந்தப் பெயரைச் சொன்னதும் உங்களுக்கு வேறு நடிகரது நினைவு வந்தால் அவருக்கும் இந்தப் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஏனெனில் இந்தப் படத்து நாயகனின் அதிகாரப் பூர்வ சினிமா பெயரே சாம்பார் ராசன் தான்!

Article courtesy: The New Indian Express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com