ரஜினிகாந்தின் '2.0' திரைப்பட தயாரிப்பு காட்சிகள் வெளியீடு! (விடியோ இணைப்பு)

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் கைவண்ணத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் தயாரிப்பு காட்சிகள் தற்பொழுது... 
ரஜினிகாந்தின் '2.0' திரைப்பட தயாரிப்பு காட்சிகள் வெளியீடு! (விடியோ இணைப்பு)

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் கைவண்ணத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் தயாரிப்பு காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷங்கர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் '2.0 படம் எப்படி உருவாகிறது என்பதனை நாளை மாலை 6 மணிக்கு பார்க்கலாம்' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி '2.0' படத்தின் தயாரிப்பு காட்சிகளை ஷங்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

சுமார் 1.48 நிமிடங்கள் ஒடக் கூடிய இந்த படத்தில் அப்படத்திற்கான செட்டுகள் அமைக்கப்பட்ட விதம் , ரஜினி மற்றும் அக்ஷய்குமார் இருவருக்குமான சிறப்புத் தோற்றங்கள் உருவாகும் விதம், அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை பார்க்கும் பொழுது முழுப்படம் எப்படி உருவாகி வந்திருக்கும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

விடியோ இணைப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com