நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டிய விவேகம்!

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குஷியான செய்தி. விவேகம் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது...
நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டிய விவேகம்!

சமீபத்தில் வெளியான விவேகம் படம் நூறு கோடி வசூலை எட்டியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. 

சென்னையில் விவேகம் படம் புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் சென்னையில் தொடர்ந்து நான்கு நாள்களாக தலா ரூ.1 கோடி வசூலித்ததில்லை. இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது விவேகம். முதல் நான்கு நாள்களில் தினமும் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஐந்தாவது நாளான நேற்று சென்னையில் ரூ. 56 லட்சம் வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் 5 நாள்களில் கிட்டத்தட்ட ரூ. கோடி வசூலித்துள்ளது. 

விவேகம்: சென்னை

5 நாள்கள் - (கிட்டத்தட்ட) ரூ. 6.30 கோடி

முதல் நாள்: ரூ. 1.21 கோடி
இரண்டாம் நாள்: ரூ. 1.51 கோடி
மூன்றாம் நாள்: ரூ. 1.52 கோடி
நான்காம் நாள்: ரூ. 1.43 கோடி

ஐந்தாம் நாள்: ரூ. 56 லட்சம்

சென்னையில் பாகுபலி 2 வசூல் சாதனையையும் விவேகம் முறியடித்துள்ளது. பாகுபலி 2, வார இறுதி வசூலாக ரூ. 3.70 கோடியைப் பெற்றது. அந்த வசூலைத் தாண்டி முன்னணி நிலையை அடைந்துள்ளது விவேகம். சென்னையில் இதுவரை அஜித் படங்களான ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் பட வசூல்களை அதற்குள் இந்தப் படம் தாண்டியுள்ளது. வேதாளம் பட வசூலையும் தாண்டி சென்னையில் அதிகம் வசூலித்த அஜித் படம் என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளது. 

இதுதவிர அஜித் ரசிகர்களுக்கு ஒரு குஷியான செய்தி. விவேகம் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. 

விவேகம்: முதல் நான்கு நாள்கள்

(கிட்டத்தட்ட) ரூ. 107 கோடி

தமிழ்நாடு: ரூ. 49 கோடி

இந்தியா: ரூ. 70 கோடி

வெளிநாடு: ரூ. 37 கோடி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com