ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்!

பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்!

சென்னை: பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் பாரதிராஜாவால் 'புது நெல்லு புது நாத்து' படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் நெப்போலியன். பின்னர் படிப்படியாக வில்லன் கதாபத்திரத்தில் இருந்து கதாநாயகனாக மாறி பல படங்களில் நடித்துள்ளார். பிற மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். பின்னர் அரசியலுக்குள் நுழைந்த பிறகு நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்பொழுது நெப்போலியன் முதன்முறையாக சாம் லோகன் என்னும் இயக்குநர் இயக்கத்தில் "Devil’s Night:Dawn Of The Nain Rouge" என்னும்  ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் என் சொந்த ஊரான திருச்சியைச் சேர்ந்தவர். எனக்கு பத்து வருடங்களாக அவருடன் நட்பு உண்டு. ஒரு நாள் அவர் என்னிடம் தான்  ஒரு ஆங்கிலப்படத்தினை தயாரிக்கப் போவதாகக் கூறினார். அவருக்கு நான் வாழ்த்துத் தெரிவித்த பொழுதுதான், நானும் இந்த படத்தில் நடிக்கும் தகவலை அவர் என்னிடம் கூறினார்.

எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது என்று கூறியும் அவர் தொடர்ந்து நான் நடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். அத்துடன் நான் ஓய்வாக இருக்கும் பொழுது படப்பிடிப்பினை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

உண்மைச் சம்பத்தின் அடிப்படையில் அமானுஷ்ய த்ரில்லராக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு உள்ளூரில் உலா வரும் செவி வழிக்கதை ஒன்றும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருங்காட்சிய காப்பாளர் வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்கான காட்சிகளின் பெரும்பகுதியினை கடந்த அக்டோபர் மாதத்திலேயே முடித்து விட்டேன்.  இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

தமிழ் பின்னணிப் பாடகரான தேவன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். அத்துடன் இது நான் நடிக்கும் முதலாவது 'லைவ் சவுண்ட்'  படமாகும்.

இவ்வாறு நெப்போலியன் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com