வாகன நிறுத்தக் கட்டண உத்தரவை அமல்படுத்தவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

தியாகராய நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்குகளில் கார்களுக்கு ரூ. 20 மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும்...
வாகன நிறுத்தக் கட்டண உத்தரவை அமல்படுத்தவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கென தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்மற்றும் வாகன நிறுத்தக் கட்டணம் மிக அதிமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன. இதுதொடர்பாக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதுபோல இப்போது திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணத்தையும் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 7 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 5, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 3 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் சைக்கிள்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த வாகன கட்டணம் தொடர்பான உத்தரவை அமல்படுத்துவதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது: அரசின் உத்தரவுப்படி தியாகராய நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்குகளில் கார்களுக்கு ரூ. 20 மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நாவலூரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கத்தில், வாகன நிறுத்தக் கட்டணத்தை மால் நிர்வாகம் வசூலிக்கிறது. எனவே இதுபறி அவர்கள்தான்
முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com