50 நாள்கள் ஓடி ரூ.200 கோடி சம்பாதித்த அஜய் தேவ்கன் படம்!

அக்டோபர் 20 அன்று வெளியான இப்படம் முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ. 136 கோடி வசூல் கண்டது...
50 நாள்கள் ஓடி ரூ.200 கோடி சம்பாதித்த அஜய் தேவ்கன் படம்!

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, பரிநீத்தி சோப்ரா போன்றோர் நடித்த படம் - கோல்மால் அகைன். கோல்மால் படத்தொடரின் நான்காம் பாகம் இது. இந்தப் படத்தின் மூலம் அஜய் தேவ்கனும் ரோஹித் ஷெட்டியும் பத்தாவது முறையாக இணைந்துள்ளார்கள். 

வெளியான நாள் முதல் அபாரமான வசூல் கண்ட இந்தப் படம் சமீபத்தில் தனது 50-வது நாளைக் கொண்டாடியது. 50-வது நாளின்போது இந்தியா முழுக்க 63 திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது.

அக்டோபர் 20 அன்று வெளியான இப்படம் முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ. 136 கோடி வசூல் கண்டது. அடுத்த வார வசூல் - ரூ. 47 கோடி. இந்நிலையில் 50-வது நாள் சமயத்தில் அதன் 7-வது வார வசூல் - ரூ. 46 லட்சம்! ரூ.205 கோடி வசூல் எடுத்து அஜய் தேவ்கன் மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

ஒரு வாரத்துடன் பல படங்களின் கதை முடிகிற சமயத்தில் இந்தப் படம் 2017-ல் வெளிவந்த பாலிவுட் படங்களில் சூப்பர் ஹிட் என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com