டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு அடங்க மறு என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியின் 24-வது படம் இது. தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இதில் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
அடங்க மறு படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.