2017-ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்...

அதிகம் தேடப்படும் நடிகை தான் நம்பர் ஒன் நடிகை என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் கூகுள், யாஹூ, எமெஸ் என், மை சர்ச் உள்ளிட்ட தேடுபொறிகளில் தேடப்படும்
2017-ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்...

இணையதளங்களில் தேடுபொறிகள் பெருகியதின் புண்ணியம் இப்போதெல்லாம் இந்தியாவெங்கும் எந்தெந்த ரசிகர்கள் எந்தெந்த நடிகர், நடிகைகளை அதிகம் தேடுகிறார்கள் என்பதை எளிதில் கண்டறிந்து விட முடிகிறது. இந்தியாவில் இந்தி, மராட்டி, ஒரியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி என பல மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒவ்வொரு மாநிலத்திலும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும், விமர்சிக்கப்படும், கண்டனம் தெரிவிக்கப்படும், நடிகைகள் எனப் பலருண்டு. 2017 ஆம் ஆண்டில் அப்படி ரசிகப் பெருமக்களால் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் யாரெல்லாம் என்று பார்த்து விடலாமா?

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதிகம் தேடப்படும் நடிகை தான் நம்பர் ஒன் நடிகை என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் கூகுள், யாஹூ, எமெஸ் என், மை சர்ச் உள்ளிட்ட தேடுபொறிகளில் தேடப்படும் நடிகைகள் பெரும்பாலும் தங்களது துறையில் வெற்றியடைந்து லைம்லைட்டில் உள்ள நடிகைகள் மட்டுமே என்று கருத வழியில்லை. உதாரணத்திற்கு நடிகை மம்தா குல்கர்னி இன்றைய சூழலில் ஃபீல்டு அவுட் ஆன நடிகை ஆனால் அவரையும் நெட்டிஸன்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். காரணம் கடந்தாண்டு பரபரப்பாகப் பேசப்பட்ட ரூ 2000 கோடி ரூபாய் போதை மருந்துக் கடத்தல் வழக்கில் கைதான விக்கி கோஸ்வாமியைக் காதலித்து கைபிடித்ததால் மம்தா குல்கர்னிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி தான் இது. காதல் கணவரோடு அவரும் சேர்ந்து கைது செய்யப்பட்டார். எனினும் தமிழிலும் ஒரு படத்தில் நடித்திருந்த காரணத்தால் மம்தா குல்கர்னியை இந்தியர்கள் கடந்த ஆண்டில் இணையத்தில் தேடு தேடென்று தேடி டாப் டென் லிஸ்டில் 7 வது இடம் பிடிக்கச் செய்து விட்டார்கள்.

இவரைப் போலவே நெகடிவ் பப்ளிஸிட்டியால் பாப்புலர் ஆகி தேடுதல் லிஸ்டில் 9 ஆம் இடம் பிடித்தவர் நடிகை காவ்யா மாதவன். கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கும் குற்றத்தில் பங்கிருக்குமா? இல்லையா? என்ற விவாதம் மிகப்பெரும் பேசுபொருளாகி அவரையும் தேடுதல் லிஸ்டில் இடம்பெற வைத்திருக்கலாம்.

இவர்களைத் தவிர நடிகை கரீனா கபூர், கடந்தாண்டு ஹாட் டாபிக்கே கரீனாவுக்கு குழந்தை பிறந்ததும் அவர் அக்குழந்தைக்கு தைமூர் அலிகான் பட்டோடி என்று பெயர் வைத்ததும் தான். குழந்தையால் கரீனாவும் கூட லைம்லட்டில் இல்லாவிட்டாலும் டாப் டென் லிஸ்டில் 6 ஆம் இடம் பிடித்து விட்டார். கரீனா மட்டுமல்ல இன்று வரை அவரது மகன் தைமூரும் கூட நெட்டிஸன்களின் ஹாட் தேடுதல் வட்டத்துக்குள் தான் இருக்கிறார்கள்.

தீபிகா படுகோன் பத்மாவதி படத்தில் ராணி பத்மினியாக நடித்தாலும் நடித்தார். அவரைச் சுற்றி சுழற்றி வீசத் தயாராக கண்டனப் பேரோசையுடன் ஒரு மாபெரும் கிளர்ச்சி வெடித்தது வடக்கே. முடிவு படத்தில் நடித்த தீபிகாவின் தலைக்கு விலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு தரமிறங்கின தீவிர இந்துத்வா வெறி அமைப்புகள். தீபிகா தேடலில் 5 ஆம் இடம் பெற்றதற்கு இதுவும் பிரதான காரணமாயிற்று.

ஐஸ்வர்யா ராயும், ப்ரியங்கா சோப்ராவும் தேடல் லிஸ்டில் இடம்பெறா விட்டால் தான் அது அதிசயம். அவர்களைச் சுற்றி எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயங்கள் இல்லாமல் இருந்ததில்லை எனும் போது அவர்கள் அந்த லிஸ்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வராமல் போனால் தானே அது ஆச்ச்ர்யப்படத் தக்கதாக இருக்க முடியும்.

ஆனாலும், இந்த டாப் டென் லிஸ்டில் நாயகிகள், சூப்பர் ஸ்டாரிணிகள் எல்லோரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தவர் யார் தெரியுமா?

அட, நம்ம சேட்டன்களின் தேசத்தில் திறப்பு விழா நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்று விட்டு அவர்களது பாசப் பெருமழையில் நனைந்து மீள முடியாமல் ட்விட்டரில் தனது அன்பை வெளிப்படுத்திய சன்னி லியோன் தான் அது! சன்னி தான் டாப் டென்னில் முதலிடம் பெற்ற நடிகை. இவரைப் பற்றிய விவரங்களைத் தான் இந்தியாவின் அனைத்து மாநில நெட்டிஸன்களும் அல்லும், பகலுமாகத் தேடு, தேடென்று தேடி அவரை முதலிடம் பிடிக்க வைத்திருக்கிறார்கள்.

10.இஷா குப்தா


9.காவ்யா மாதவன்


8.திஷா பதானி


7.மம்தா குல்கர்னி


6.கரீனா கபூர்


5.தீபிகா படுகோன்


4.காத்ரினா கைஃப்


3.ஐஸ்வர்யா ராய்


2.ப்ரியங்கா சோப்ரா


1.சன்னி லியோன்

Image Courtesy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com