அரசியலுக்கு காலம் மிக முக்கியம்: ரஜினி பேச்சு!

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4-ம் நாள் சந்திப்பில் வேலூர், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை...
அரசியலுக்கு காலம் மிக முக்கியம்: ரஜினி பேச்சு!

சினிமா ஆனாலும் அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4-ம் நாள் சந்திப்பில் வேலூர், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது:

என் நண்பர்கள், குருநாதர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை. ஆன்மிகத்தை கற்றுக்கொடு; மதத்தை கற்று தராதே என குருநாதர் சச்சிதானந்தர் எனக்கு அறிவுரை வழங்கினார்.

சினிமா ஆனாலும் அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம்; காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்.

எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்துத்தான் நம்மை மக்கள் மதிப்பார்கள். நடிப்பைத் தாண்டி பல நற்பண்புகள் சிவாஜியிடம் இருந்தன. பணம், புகழை விட மனிதனின் குணம் தான், அவனைக் காலம் கடந்து வாழவைக்கும். இதற்குச் சிறந்த உதாரணம், எம்ஜிஆர். 

பெயர், புகழால் மரியாதை கிடைக்கும், ஒருவரது குணமே அதிக மதிப்பைப் பெற்றுத்தரும் என்றார் ரஜினிகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com