தமிழ் சினிமா நடிகர்களுக்கு வேட்டி கட்டத் தெரியவில்லை: இயக்குநர் வேதனை!

இன்றைய நடிகர்களுக்கு வேட்டி கட்டத் தெரியவில்லை. நம் பண்பாட்டை நாம் இழந்துவருகிறோம் என...
தமிழ் சினிமா நடிகர்களுக்கு வேட்டி கட்டத் தெரியவில்லை: இயக்குநர் வேதனை!

இன்றைய நடிகர்களுக்கு வேட்டி கட்டத் தெரியவில்லை. நம் பண்பாட்டை நாம் இழந்துவருகிறோம் என இயக்குநர் பூபதி பாண்டியன் கூறியுள்ளார்.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள மன்னர் வகையறா படத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், பிரபு, சரண்யா போன்றோர் நடித்துள்ளார்கள். ஏ3வி சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது:

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்து பின்வாங்கிவிட்டார் போலத் தெரிகிறது. அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் இயக்கத்தில் நடித்த கதாநாயகர்களான தனுஷ், விஷால் ஆகியோர் பிறகு வெற்றிகரமான தயாரிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள். அந்த வகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்குப் படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நிறைய நடிகர்களுக்குச் சரியாக வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டு வருகிறோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தோம். ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் எனச் சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம் என்று பேசியுள்ளார். 

இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com