ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த விமரிசனங்களும் மீம்ஸுகளும்

சமூக வலைத்தளங்கள் இன்று தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்ட நிலையில், வருடத்தின் கடைசி நாளான
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த விமரிசனங்களும் மீம்ஸுகளும்

சமூக வலைத்தளங்கள் இன்று தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்ட நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று உலகமே கொண்டாட்ட மனநிலையில் இருக்கையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பலரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நிலையில் சிலர் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர். ரஜினி ஆஷ் டேக்கில் இன்று கண்ணில் பட்டவை   இவை...

***

ஜனநாயகம் கெட்டு போச்சு 
அரசியல் கெட்டு போச்சு....

ஆனால் தேர்தல் வரை ரசிகர்கள் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யக்கூடாது...

இது எந்த வகை அரசியல் நிலைப்பாடு என்பதை விளக்க முடியுமா? மிஸ்டர் #ரஜினிகாந்த்

***

நான் சிறு வயதிலிருந்து கொண்டாடித் தீர்த்த ஒரு மாபெரும் நடிகன் அரசியல் பிரவேசிப்பு என்ற பெயரில் நிகழ்த்தும் அவலங்கள் & அதை தொடர்ந்து என்னாலும் பிறராலும் பரிகாசத்திற்கு உட்படுத்தப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது #ரஜினிகாந்த்

***

#கம்யூனிஸ்ட் : #ரஜினிகாந்த் க்கும் தமிழக அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ?? 

#ரஜினி  ரசிகன் : சேகுவாரே டிசர்டுக்கும்  தமிழகத்திற்கும் என்னடா சம்பந்தம்?? 

***

ரசிகர்-1: தலைவர் அரசியலுக்கு வந்துட்டாரு. ஸ்வீட் எடுத்துக்கங்க.

ரசிகர்-2: அம்பது வயசை தாண்டிருச்சுங்க எனக்கு. சுகர் இருக்கு. டாக்டர் ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. 

***

இது வரை காவேரி பற்றி பேசாதவர். தமிழர்களை கன்னடன் தாக்கும்போது அதை கண்டிக்காதவர். இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளை கண்டிக்காதவர். விவசாயிகள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை பற்றி எதுவும் வாய் திறக்காதவர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காதவர். நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்காதவர். கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்னையை பற்றி எதுவும் பேசாதவர்.

மீனவர்களை இலங்கை கொல்லும் போது அது போராக ரஜினிக்கு தெரியவில்லையா? : கவுதமன் 

***


#ரஜினி சார் நீங்க அரசியலுக்கு வரது இருக்கட்டும், மொதல்ல சீமான் கிட்ட நீங்க தமிழன் னு ஒரு சர்டிபிகேட் வாங்கிடீடு வாங்க அப்பதான் நாங்க ஏத்துக்குவோம் 
#ரஜினிகாந்த் 

***

ஆனால் விமரிசனங்கள் பலவிதமாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன்கார்டுகளில் எழுதபடாத ஒரு குடும்பபெயர் #ரஜினிகாந்த் # என்ற ஒரு ரசிகரின் டிவிட்டர் இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com