நான் அரசியலுக்கு தகுதி இல்லாதவன்: கமல் 'ஓபன் டாக்'!

 கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லாதவர்கள்; நான் மிகவும் கோபக்காரன்.எனவே அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்று நடிகர் கமல்ஹாசன்...
நான் அரசியலுக்கு தகுதி இல்லாதவன்: கமல் 'ஓபன் டாக்'!

சென்னை: கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லாதவர்கள்; நான் மிகவும் கோபக்காரன்.எனவே அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் பொதுவான தமிழகத்தின் தற்போதைய  அரசியல் சூழல் குறித்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:

ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஒருவரின் குடுமபத்திற்கு ஆதரவாக இருக்கும் ஒருவர் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்தான்.

தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால் தெருக்களில் பொதுமக்களிடம் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது.

நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை

நமது சட்டசபையை நாம்தான் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் தங்களின் மனதில் உள்ளதை நேர்மையாக வெளிப்படுத்தும் வகையில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com