வன்முறையைத் தூண்டும் விதம் ட்வீட் செய்ததாக கமல் மீது காவல்துறையில் புகார்!

கமலின் இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில்...
வன்முறையைத் தூண்டும் விதம் ட்வீட் செய்ததாக கமல் மீது காவல்துறையில் புகார்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது. மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் பரபரப்பான அரசியல் சூழலையும் அன்றைய தினம் காண நேர்ந்தது. அதுபற்றி நடிகர் கமல் ட்விட்டரில் கூறியதாவது: இதோ நமக்கு இன்னொரு முதலமைச்சர். தமிழ்நாட்டு மக்களே, அவரவர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்கவும். Rajbhavantamilnadu@gmail.com-ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும்  அது அசம்பளியில்ல Governor வீடு என்று கூறினார். 

கமலின் இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை மாநகக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமலின் ட்விட்டர் கருத்துகள், எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது. அதுபோன்று பதிவிட்ட கமல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com