ஆஸ்கர் விருதுகள் நாளை அறிவிப்பு: ரசிகர்கள் ஆர்வம்! 

89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நாளை (பிப்ரவரி 26-ம் தேதி) நடைபெறவுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் நாளை அறிவிப்பு: ரசிகர்கள் ஆர்வம்! 

2017-ம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நாளை (பிப்ரவரி 26-ம் தேதி) நடைபெறவுள்ளது. 

அந்த விருதுக்கான பரிந்துரைகள் சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. 

இந்தப் பட்டியலில் "லா லா லேண்ட்' என்ற திரைப்படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் "ஆல் அபௌட் தி ஈவ்' (1959), "டைட்டானிக்' (1997) ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை "லா லா லேண்ட்' திரைப்படம் பெற்றுள்ளது.

இயக்குநர் டாமியன் சாஸ்ஸலின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படமானது ஓர் இசைக் கலைஞருக்கும், ஹாலிவுட் நடிகைக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டதாகும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் இந்தப் படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், "லயன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய - நடிகரான தேவ் படேல் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஆஸ்கர் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்தின் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன திரைப்படங்கள்? இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு "அரைவல்', ஃபென்ஸஸ், "ஹேக்ஸா ரிட்ஜ், "ஹெல் ஆர் ஹை வாட்டர்', "ஹிட்டன் ஃபிகர்ஸ்', "மூன்லைட்', "மான்செஸ்டர் பை தி ஸீ' ஆகிய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நடிகர் - நடிகைகள்: ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த நடிகருக்கான பிரிவில் ஹாலிவுட் நடிகர்கள் கேஸி அஃப்லெக், ஆண்ட்ரூ கேர்ஃபீல்ட், ரியான் கோஸ்லிங், விகோ மார்டென்ùஸன், டென்ஸல் வாஷிங்டன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

சிறந்த நடிகைக்கான பிரிவில் இஸபெல் ஹுப்பெர்ட், ரூத் நேகா, எம்மா ஸ்டோன், நட்டாலி போர்ட்மேன், மெரைல் ஸ்டிரீப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கன்றனர்.

லா லா லேண்ட் எத்தனை விருது பெறும், தேவ் படேல் விருது பெறுவாரா போன்ற பல ஆர்வங்களுடன் ரசிகர்கள் இந்த விருது அறிவிப்பை எதிர்பார்த்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com