திரை நட்சத்திரங்களுடன் "பிங்க்' படம் பார்த்த குடியரசுத் தலைவர்

பாலிவுட் திரை உலகில் வெற்றிகரமாக ஓடிய "பிங்க்' ஹிந்தி திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் இணைந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை மாலையில் அந்தப் படத்தை கண்டு களித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் 'பிங்க்' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடும் நிகழ்வில் பங்கேற்ற படத்தின் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி உள்ளிட்டோரை கௌரவித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இந்திய நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு நிலையை விளக்கும் வகையில், "பிங்க்' படத்தை பாலிவுட் இயக்குநர் அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கினார்.
இந்தப் படத்தை தனது மாளிகை அரங்கில் பார்வையிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரும்பினார். அப்படத்தில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞராக நடித்த பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன், நாயகி டாப்ஸி, படத்தின் கலைஞர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தனி விமானத்தில் "பிங்க்' படக் குழுவினர் தில்லிக்கு சனிக்கிழமை வந்தனர். படம் திரையிடும் முன்பாக அவர்களுக்கு சால்வை அணிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார். பின்னர் முழு படத்தையும் அவர்களுடன் இணைந்து அவர் பார்த்து ரசித்தார். பின்னர் தனது மாளிகையிலேயே படக் குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரவு விருந்தளித்தார்.
குடியரசுத் தலைவருடன் படம் பார்த்த அனுபவம் குறித்து படத்தின் நாயகி டாப்ஸி, தனது சுட்டுரை பக்கத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். "குடியரசுத் தலைவருடன் இரவு விருந்து உட்கொண்டதும், அவருக்கு அருகே அமர்ந்து படம் பார்த்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது' என அவர் கூறியுள்ளார்.
இதேபோல பாலிவுட் நட்சத்திர நாயகன் அமிதாப்பும் தனது சுட்டுரையில், "குடியரசுத் தலைவர் "பிங்க்' படக் குழுவினரை தனது மாளிகைக்கு அழைத்து, படம் பார்த்து விருந்து அளித்துள்ளார்' என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com