ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொகுப்பாளர் டிடி எதிர்ப்பு!

அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது...
ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொகுப்பாளர் டிடி எதிர்ப்பு!

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நெடுவாசல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டைப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷிணி ட்விட்டரில் கூறியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும். அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது. விவசாயிகள் இதுபற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என் தந்தை பிறந்த பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com