அலங்காநல்லூரில் ஜி.வி. பிரகாஷ்: பீட்டாவைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கை!

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு...
அலங்காநல்லூரில் ஜி.வி. பிரகாஷ்: பீட்டாவைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கை!

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வாடிவாசல் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று காலை 7 மணிமுதல் தொடங்கிய போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிராமமக்கள் செய்து கொடுத்தனர். சென்னை செல்லும் வழியில் அலங்காநல்லூருக்கு வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து சேலம் ஆத்தூர் தளவாய்பேட்டையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி காலையில் போராட்டம் நடத்தினார்.

அலங்காநல்லூரில், கைதானவர்களை விடுவிக்கக் கோரி காலை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்திலும் ஜி.வி. பிரகாஷ் கலந்துகொண்டுள்ளார்.

அவர் அப்போது பேட்டியளித்ததாவது: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும். பீட்டாவைத் தடை செய்யவேண்டும். இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் அனைவரும் இளைஞர்கள். உலகின் மூத்த மொழி, தமிழ். நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com