ஜனவரி 20-ல் உண்ணாவிரதப் போராட்டம்: நடிகர் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 20-ல் உண்ணாவிரதப் போராட்டம்: நடிகர் சங்கம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:

தமிழர்கள் என்கிற அடையாளத்தை மீறி எங்களுக்கு வேறு அடையாளம் கிடையாது. மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னால் இருந்து நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ளவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com