பீட்டாவை இனி ஆதரிக்கமாட்டேன்: மனம் மாறினார் பாடகி சுசித்ரா

தெளிவாகச் சொல்கிறேன், இனிமேல் நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கமாட்டேன்...
பீட்டாவை இனி ஆதரிக்கமாட்டேன்: மனம் மாறினார் பாடகி சுசித்ரா

நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு என் ஆதரவை அளிக்கிறேன் என பாடகி சுசித்ரா முதலில் கூறிய நிலையில் தற்போது மனம் மாறியுள்ளார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. இந்த தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குரிய தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் பீட்டா ஆதரவாளரான பாடகி சுசித்ரா ட்விட்டரில் ஜல்லிக்கட்டு குறித்து கூறியதாவது: நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறேன். நான் சொந்தமாக விலங்குகளைத் தத்தெடுத்துள்ளேன். ஆனாலும், ஜல்லிக்கட்டுக்கு என் ஆதரவை அளிக்கிறேன். ஏனினில், என் மக்கள் அதை விரும்புகிறார்கள். எனவே அரசாங்கமே, விதிமுறைகளை வகுத்து, காளைகளுக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கினாலும் சரி, பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துங்கள். ஆனால் எங்களைப் புறக்கணிக்கவேண்டாம். எங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். எனவே சரியான செயலைச் செய்யுங்கள். இதைப் புரிந்துகொள்ளுங்கள். பீட்டா, காளைகளைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஸ்பெயினின் காளைச்சண்டை என எண்ணிக்கொள்கிறார்கள். அந்த விளையாட்டு மிகவும் கொடுமையானது. ஆனால், ஜல்லிக்கட்டு என்பது காளையுடனான சண்டை கிடையாது. நாங்கள் எங்கள் காளைகளை நேசிக்கிறோம். நாட்டு மாடுகளை தாயாக எண்ணுகிறோம். இது ஆதாரபூர்வமான தகவல். உணர்ச்சிவசப்பட்டு சொல்லவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து அவர் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஒருவேளை தவறுதலான புரிதல் இருந்தால் அதற்காகச் சொல்லிவிடுகிறேன். தெளிவாகச் சொல்கிறேன், இனிமேல் நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கமாட்டேன். ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com