கேளிக்கை வரியை எதிர்த்து இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்து

தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து ஏற்கெனவே அறிவித்தபடி திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர்
கேளிக்கை வரியை எதிர்த்து இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்து

தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து ஏற்கெனவே அறிவித்தபடி திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார். கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியுடன், தமிழக அரசின் கேளிக்கை வரியும் இணைவதால், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த வரியோடு தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியையும் இணைத்து செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். ரூ. 100 கட்டணம் என்றால் சுமார் ரூ.58}ஐ அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இப்படி செலுத்தி விட்டு, நாங்கள் என்ன செய்வது?
ரத்து செய்யும் வரை: நாங்கள் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம். மாநில அரசிடம் எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம். அவர்கள்தான் நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.
கேளிக்கை வரியை மாநில அரசு ரத்து செய்யும் வரை படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் திரையரங்குகள் மூடப்படும்.
ரூ.50 முதல் ரூ.200 வரை சினிமா கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பிற மாநிலங்களைப் போல் ஒரே வரி விதிப்பு முறையை சினிமா துறைக்கு அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு எங்களுக்கு சாதகமான முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அபிராமி ராமநாதன்.
திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com