நிஜமாகவே அமீர்கானின் டங்கல் 2000 கோடி வசூலை எட்டி விட்டதா?

டங்கல் இதுவரை இந்தியாவிலும், சீனாவிலுமாக வசூலித்திருக்கும் தொகை சுமார் 1864 கோடி ரூபாய். இது வெகு விரைவில் 2000 கோடியை எட்டும் என்பதில் ஐயமில்லை
நிஜமாகவே அமீர்கானின் டங்கல் 2000 கோடி வசூலை எட்டி விட்டதா?

அமீர்கானின் டங்கல் இந்தியப் படங்களில் முதன்முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படமாகக் கருதப் படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சர்வேயில் கூட அவ்வாறு தான் கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீன வெளியீட்டிலும் டங்கல் ஈட்டிய வசூலைக் கணக்கிட்டு தான் போர்ப்ஸ் அவ்வாறு தனது முடிவை வெளியிட்டது. ஆனால் அமீர்கானுக்கு இந்த முடிவுகளில் திருப்தி இல்லை.

அமீர்கானின் பிரதிநிதியாகப் பேசிய அமீர்கான் அலுவலகத்தைச் சேர்ந்த நபர் கூறியதின் அடிப்படையில் டங்கல் இதுவரை இந்தியாவிலும், சீனாவிலுமாக வசூலித்திருக்கும் தொகை சுமார் 1864 கோடி ரூபாய். இது வெகு விரைவில் 2000 கோடியை எட்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கடந்த மே 5 ஆம் தேதி வரை சீனத் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருந்தது டங்கல். சீனாவில் டங்கலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அப்பா, மகள் உறவுமுறை சற்றே பெண்ணடிமைத் தனமாகக் கருதப் பட்டாலும் மக்கள் குடும்பம், குடும்பமாக திரையரங்குகளை நிறைத்து இந்தப் படத்தை பார்த்தனர்.

அதற்கான பலன் தான் 2000 கோடி எட்டி விடும் தூரத்தில் இருக்கிறது. ஆயினும் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதைப் போல டங்கல் இன்னும் 2000 கோடியை எட்டவில்லை... கூடிய விரைவில் எட்டும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமீர்.

இந்தியாவில் டங்கல் ஈட்டிய வசூல் 375 கோடி. இது அவரது முந்தைய பிளாக்பஸ்டர் படமான பீகேவைக் காட்டிலும் அதிகம்... பீகே மட்டுமல்ல 2016 ஆம் ஆண்டின் சுப்பர் ஹிட் திரிஅப்படமான சல்மானின் சுல்தான் ஈட்டிய வருவாயைக் காட்டிலும் அதிகம் எனக் கணக்கிடப் பட்டது. அதுமட்டுமல்ல இந்தியாவில் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியான டங்கல் சில மாத இடைவெளிக்குப் பின் சீனாவில் இண்டர்நேஷனல் பிரீமியர் ஷோவில், ‘அப்பா, வாருங்கள் மல்யுத்தம் செய்வோம்’ (let's wrestle dad) என்ற பெயரில் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அங்கே டங்கலுக்கு கிடைத்திருக்கும் அபிரிமிதமான வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து வரும் டங்கல் படக்குழுவினர், இந்த திரைப்படத்தை உலகின் வேறு வேறு நாடுகளில் ரிலீஸ் செய்து பார்க்கும் சோதனை முயற்சியை தங்களுக்கு இத்திரைப்பட வெற்றி அளித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். வேறு, வேறு கலாச்சாரம், மொழி கொண்ட மக்களையும் ஈர்க்கும் விதமான இவ்வகையான திரைப்படங்கள் வெற்றி வசூலைக் குவித்து வருவதில் மொத்த இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியே!

Image courtsy: NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com