பிக் பாஸ் ஒரு வக்கிர விளையாட்டு... ஆனால் அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்:அனுயா!

அடுத்தவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது? என்று அறிந்து கொள்ள விரும்புவது மனித சுபாவம்... பிறரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று கருதுவதில் தான் மக்கள்
பிக் பாஸ் ஒரு வக்கிர விளையாட்டு... ஆனால் அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்:அனுயா!

கடந்த வார இறுதியில் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை அனுயா இன்று பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார். போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு எப்படி உணர்கிறீர்கள்? என்ற கமலின் கேள்விக்கு; இப்போது தான் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது... இடைவிடாது கண்காணிப்புக் கேமராக்களின் மத்தியில் பிற பங்கேற்பாளர்களுடன் எனக்கு மொழிப்பிரச்னையும் இருந்ததால் நான் போட்டியிலிருந்து விலக்கப் பட்டேன். அதைப் பற்றி நான் வருந்தவில்லை. பாத்ரூம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தப் பட்டு சதா அங்கிருப்பவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டே இருப்பது ஒரு விதமான வக்கிரமான விளையாட்டு என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்ன செய்வது மக்கள் அதைத் தான் விரும்புகிறார்கள்.

அடுத்தவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது? என்று அறிந்து கொள்ள விரும்புவது மனித சுபாவம்... பிறரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று கருதுவதில் தான் மக்கள் திருப்தி அடைகிறார்கள்... இல்லையா?! அது தான் இந்தப் போட்டியின் வெற்றி. ஆங்கிலம், இந்தி, என இந்த ரியாலிட்டி ஷோ அனைத்து மொழிகளிலும் மக்களால் விரும்பிப் பார்க்கப் படுவதற்கும் இதுவே காரணம். என்கிறார் அனுயா. அதோடு போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களால் பெட் கட்ட முடியுமா? என்ற கேள்விக்கு. என்னைப் பொறுத்தவரை அங்கிருந்தவர்களில் ‘கணேஷ் வெங்கட் ராம்’ புத்திசாலி. அவர் மற்ற பங்கேற்பாளர்களுடன் எல்லா வகையிலும் நட்புணர்வோடு அனுசரித்துச் செல்லும் மனப்பான்மை உடையவராக இருக்கிறார். போட்டியில் வெல்வதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் உண்மையான தோழமையோடு பழகத் தெரிந்தாலே போதும்’ என்றும் அனுயா கூறியுள்ளார்.

ஜூன் 16 ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தொடரில் முதலில் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை 15. அதில் உடல் நலக் குறைவால் ஸ்ரீ முதலில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது மொழிப் பிரச்னையால் அனுயாவும் வெளியேற்றப் பட்டுள்ளார். தொடர்ந்து 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத நிலையில் பிரபலங்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல் கடைசி வரை யார் நீடிக்கிறார்களோ? அவர்களே வெற்றி வாகை சூடியவர்களாக அறிவிக்கப் பட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com