கேளிக்கை வரி: இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும்!

முதல்வருடனான சந்திப்பில் நான்கு மந்திரிகள் இருந்தார்கள். அவர்களிடம் எங்கள் சிரமங்களை விளக்கிச் சொன்னோம்... 
கேளிக்கை வரி: இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும்!

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக 1,200 தியேட்டர்கள் காலவரையின்றி மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேளிக்கை வரியை எதிர்த்து இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.35 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் போராட்டம் புதன்கிழமையும் (ஜூலை 5) தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் புதன்கிழமை (ஜூலை 5) அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது: 

எங்களால் இந்த வரிச்சுமையைத் தாங்கமுடியாது. நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்படுகிறது. முதல்வருடனான சந்திப்பில் நான்கு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களிடம் எங்கள் சிரமங்களை விளக்கிச் சொன்னோம். அப்போதுதான் அவர்களும் புரிந்துகொண்டார்கள். எனவே இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com