'பவர் ஸ்டார் டு போர்ன் ஸ்டார்' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா!

“போர்ன் திரைப்படங்களைப் பார்ப்பதில் தனக்கு எத்தனை சுவாரஸ்யம் இருந்ததோ... அதே அளவு சுவாரஸ்யம் ‘காட்டமராயுடுவில்’ பவனின் நடிப்பைப் பார்க்கும் போதும் இருந்தது”
'பவர் ஸ்டார் டு போர்ன் ஸ்டார்' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா!

இது தமிழ்நாட்டு பவர் ஸ்டார் பற்றிய செய்தியில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் பொறுத்தவரை பவர் ஸ்டார் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான பவன் கல்யாணைத் தான் குறிக்கும். அக்கடபூமியின் அசத்தல் யூத் ஐகான்களில் ஒருவரான பவனின் சமீபத்திய வெற்றிப்படம் ‘காட்டமராயுடு’.

இது சிவா இயக்கத்தில் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றியைப் பெற்றுத் தந்த ‘வீரம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள கருத்து ஒன்று தற்போது டோலிவுட்டில் பவன் ரசிகர்களிடையே அனலைக் கிளப்பியிருக்கிறது.

அப்படி என்ன சொன்னார் ராம்கோபால் வர்மா? என்கிறீர்களா? எப்போதுமே தமது தடாலடி கருத்துக்கள் மற்றும் ட்வீட்கள் மூலம் தன்னை சோஷியல் மீடியாக்களிடையே ட்ரெண்டில் வைத்திருக்க ராம் கோபால் வர்மாவுக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்போது ‘காட்டமராயுடு’ வில் பவன் கல்யாண் நடிப்பைப் பார்த்து விட்டு ராம் கோபால் வர்மா விட்ட ஸ்டேட்மெண்ட் இது தான்

 “போர்ன் திரைப்படங்களைப் பார்ப்பதில் தனக்கு எத்தனை சுவாரஸ்யம் இருந்ததோ... அதே அளவு சுவாரஸ்யம் ‘காட்டமராயுடுவில்’ பவனின் நடிப்பைப் பார்க்கும் போதும் இருந்தது”

என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். 

ராம் கோபால் வர்மாவின் இந்த தடாலடி ஸ்டேட்மெண்டுக்கு பவன் தரப்பில் இருந்தோ அல்லது காட்டுத் தீ போன்ற அவரது ரசிகர் தரப்பிடமிருந்தோ இன்னும் எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. ஆயினும் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டதின் மூலம் பவர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை தானே முன் வந்து ராம் கோபால் கெடுத்துக் கொண்டாரோ என டோலிவுட்டில் ஒரு பேச்சிருக்கிறது. நிஜத்தில்  ராம் கோபால் வர்மா பவர் ஸ்டாரை போர்ன் ஸ்டார்களோடெல்லாம் ஒப்பிடவில்லை. அவர் படம் பார்க்கும் போது தனக்கேற்பட்ட தனது மனநிலையைத் தான் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இதை சம்மந்தப் பட்டவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?! என்ற குறைந்த பட்ச கவனமோ, எஅச்சரிக்கையோ எது ஒன்றுமே வழக்கம் போல ராம் கோபால் வர்மாவின் கருத்தில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com