பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தியை வெளியேற்ற வேண்டுமா? புதிய யோசனை!

ஆர்த்தியை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்கிற மீம் ஒன்று... 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தியை வெளியேற்ற வேண்டுமா? புதிய யோசனை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகிய இருவரும்தான் அதிகம் விமரிசிக்கப்படுகிறார்கள். 

ஜூலி, ஓவியாவை ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகிய இருவரும் அதிகம் விமரிசிப்பதாலும் வம்புக்கு இழுப்பதாலும் சமூவலைத்தளங்களில் இவ்விருவருக்கும் எதிராகப் பலரும் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், இந்த வாரம் வெளியேறுபவர்களுக்கான நாமினேஷன் பட்டியலில் வையாபுரி, ஆர்த்தி, ஓவியா, ஜூலி ஆகியோர் உள்ளார்கள். இவர்களில் யாருக்குக் குறைவாக வாக்கு கிடைக்குமோ அந்த நபர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார். இதுவரை குறைவான வாக்குகளைப் பெற்ற அனுயா, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் இந்நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலியைக் காப்பாற்றினால் மட்டும் போதாது, அவர்களைக் கடுப்பேற்றும் ஆர்த்தியையும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று புதிய யோசனை ஒன்றை சமூவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிப்பவர்கள் ஜூலிக்கும் ஓவியாவுக்கும் வாக்களித்தால் மட்டும் போதாது, அளிக்கவுள்ள 50 ஓட்டுகளில் வையாபுரிக்கும் கொஞ்சம் வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் ஆர்த்தியை வெளியேற்றமுடியும் என அதற்கேற்ற யோசனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் நால்வரில் ஓவியா, ஜூலியை விடவும் ஆர்த்தி, வையாபுரி ஆகிய இருவரும் குறைவான வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றறியப்படுகிறது. எனவே இவ்விருவருக்குமான இந்தப் போட்டியில் வையாபுரிக்கும் வாக்களித்து ஆர்த்தியின் வெளியேற்றத்தை உறுதி செய்யவேண்டும் என ஓவியா, ஜூலி ரசிகர்கள் மீம் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்கள். (பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்றால் கூகுள் இணையத்தளத்தில் Bigg Boss Vote என்று தேடினால் வாக்களிப்பது தொடர்பாக யோசனைகள் வழங்கப்படும்.)

சட்டமன்றத் தேர்தலின்போதுகூட இத்தகைய ஈடுபாட்டைப் பார்க்கமுடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்பதற்கு இந்த மீம் ஒரு சான்று.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com