தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

2009

சிறந்த படம் முதல் பரிசு பசங்க, சிறந்த படம் இரண்டாம் பரிசு மாயாண்டி குடும்பத்தார், சிறந்த படம் மூன்றாம் பரிசு அச்சமுண்டு அச்சமுண்டு, சிறந்த நடிகர் கரண் (மலையன்), சிறந்த நடிகை பத்மப்ரியா, (பொக்கிஷம்), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) அஞ்சலி (அங்காடித் தெரு), சிறந்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் (வில்லு), சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு (மலையன்), சிறந்த இயக்குநர் வசந்த பாலன் (அங்காடித்தெரு). சிறந்த பாடலாசிரியர் யுகபாரதி (பசங்க).

2010

சிறந்த படம் முதல் பரிசு மைனா, சிறந்த படம் இரண்டாம் பரிசு களவாணி, சிறந்த படம் மூன்றாம் பரிசு புத்ரன், சிறந்த படம் சிறப்புப் பரிசு நம்ம கிராமம், சிறந்த நடிகர் விக்ரம் (ராவணன்), சிறந்த நடிகை அமலாபால் (மைனா), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) ஒய்.ஜி.மகேந்திரா (புத்ரன்), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) சங்கீதா (புத்ரன்), சிறந்த வில்லன் நடிகர் எஸ்.திருமுருகன் (களவாணி), சிறந்த நகைச்சுவை நடிகர் ஜெ.தம்பி ராமையா (மைனா), சிறந்த குணச்சித்திர நடிகர் பி.சமுத்திர கனி (ஈசன்), சிறந்த குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் (களவாணி), சிறந்த இயக்குநர் பிரபு சாலமன் (மைனா).

2011

சிறந்த படம் முதல் பரிசு வாகை சூடவா, சிறந்த படம் இரண்டாம் பரிசு தெய்வத்திருமகள், சிறந்த படம் மூன்றாம் பரிசு உச்சிதனை முகர்ந்தால், சிறந்த படம் சிறப்புப் பரிசு மெரினா, சிறந்த நடிகர் விமல் (வாகைசூடவா), சிறந்த நடிகை இனியா (வாகைசூடவா), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) சிவகார்த்திகேயன் (மெரினா), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) அனுஷ்கா (தெய்வத் திருமகள்), சிறந்த வில்லன் நடிகர் பொன்வண்ணன் (வாகைசூடவா), சிறந்த நகைச்சுவை நடிகர் மனோ பாலா (பல படங்கள்), சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி (காஞ்சனா), சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர் (தெய்வத் திருமகள்), சிறந்த குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்), சிறந்த இயக்குநர் ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்), சிறந்த பாடலாசிரியர் முத்துலிங்கம் (மேதை).

2012

சிறந்த படம் முதல் பரிசு வழக்கு எண் 18/9, சிறந்த படம் இரண்டாம் பரிசு சாட்டை, சிறந்த படம் மூன்றாம் பரிசு தோனி, சிறந்த படம் சிறப்புப் பரிசு கும்கி, சிறந்த நடிகர் ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்), சிறந்த நடிகை லட்சுமி மேனன் (1. கும்கி 2.சுந்தரபாண்டியன்), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விக்ரம் பிரபு (கும்கி), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) சமந்தா (நீ தானே என் பொன்வசந்தம்), சிறந்த வில்லன் நடிகர் விஜய் சேதுபதி (சுந்தரபாண்டியன்), சிறந்த நகைச்சுவை நடிகர் சூரி (மனம்கொத்தி பறவை மற்றும் பல படங்கள்), சிறந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி (பாரசீக மன்னன்), சிறந்த குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன் (மனம்கொத்தி பறவை), சிறந்த குணச்சித்திர நடிகை ரேவதி (அம்மாவின் கைபேசி), சிறந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9), சிறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (பல படங்கள்).

2013

சிறந்த படம் முதல் பரிசு இராமானுஜன், சிறந்த படம் இரண்டாம் பரிசு தங்கமீன்கள், சிறந்த படம் மூன்றாம் பரிசு பண்ணையாரும் பத்மினியும், சிறந்த படம் சிறப்புப் பரிசு ஆள், சிறந்த நடிகர் ஆர்யா (ராஜா ராணி), சிறந்த நடிகை நயன்தாரா (ராஜா ராணி), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்), (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) நஸ்ரியா நசீம் (நேரம்), சிறந்த வில்லன் நடிகர்விடியல் ராஜ் (ஆள்), சிறந்த நகைச்சுவை நடிகர் சத்யன் (ராஜா ராணி), சிறந்த குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்), சிறந்த குணச்சித்திர நடிகை துளசி (பண்ணையாரும் பத்மினியும்), சிறந்த இயக்குநர் ராம் (தங்கமீன்கள்), சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் (தங்க மீன்கள்).

2014

சிறந்த படம் முதல் பரிசு குற்றம் கடிதல், சிறந்த படம் இரண்டாம் பரிசு கோலி சோடா, சிறந்த படம் மூன்றாம் பரிசு நிமிர்ந்துநில், சிறந்த படம் சிறப்புப் பரிசு காக்கா முட்டை, சிறந்த நடிகர் சித்தார்த் (காவியத் தலைவன்), சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா), சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) ஆனந்தி (கயல்), சிறந்த வில்லன் நடிகர் பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்), சிறந்த நகைச்சுவை நடிகர் கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்), சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர் (காவியத் தலைவன்), சிறந்த குணச்சித்திர நடிகை குயிலி (காவியத் தலைவன்), சிறந்த இயக்குநர் ராகவன் (மஞ்சப்பை), சிறந்த பாடாலாசிரியர் நா.முத்துக்குமார் (சைவம்).

இதேபோன்று, சிறந்த இசையமைப்பாளர்கள், கதையாசிரியர், பின்னணிப் பாடகர், பாடகி, ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், திரைப்படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்-பெண்), சிறந்த குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எம்,ஜி.ஆர்., அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும், சிறந்த சின்னத்திரை தொடர்கள், அதில் நடித்த கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com