சினிமா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன் பதிவு கட்டணம் ரத்து: முன்மாதிரியாகும் 'அபிராமி' ராமநாதன்!

ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பால் உயர்ந்து விட்ட தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரசிகர்களை பாதிக்காமலிருக்க,அபிராமி மெகா மால் தியேட்டர்களில் ஆன்லைன் முன் பதிவு கட்டணம் ரத்து ...
சினிமா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன் பதிவு கட்டணம் ரத்து: முன்மாதிரியாகும் 'அபிராமி' ராமநாதன்!

சென்னை: ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பால் உயர்ந்து விட்ட தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரசிகர்களை பாதிக்காமலிருக்க,அபிராமி மெகா மால் தியேட்டர்களில் ஆன்லைன் முன் பதிவு கட்டணம் ரத்து செய்யபப்டுவதாக, அதன் உரிமையாளர் 'அபிராமி' ராமநாதன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ம்மாதம் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் இதற்கு முன்பு டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.120 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் ரூ.153 ஆக உயர்ந்தது.மேலும் சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது 30 சதவீதம் கூடுதலாகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ஏறத்தாழ ரூ.200-ஐ நெருங்கி விடுகிறது. இதன் காரணமாக தியேட்டரில் சினிமா பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு வார் இறுதிகளில் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை.

இந்நிலையில் சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப் பால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் செலவாகிறது.

எனவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. ரசிகர்கள் பாதிக்காமல் இருக்க அபிராமி மாலில் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரத்து செய்கிறேன். இது மற்ற தியேட்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிராமி ராமநாதனின் முடிவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com